Wednesday 5 September 2012

ஊடகமும் மனித மாண்பும்
                                                                                                   சி;. பாஸ்டின்
முன்னுரை:
'18 ஆம் நூற்றாண்டில் கடற்;படை யார் கைகளில் இருந்ததோ அவர்களுக்குத் தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள் தான் உலகை தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. ஆனால் 20 -ஆம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தனக்கு கட்டுபட்டதாக்கிக் கொள்கிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்' என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் மகாதீர் அவர்கள்.ஜ1ஸஇத்தகைய சக்தி வாய்ந்த ஊடகங்கள் இன்று ஒரு சிலரின் கையில் மட்டுமே  உள்ளது. ஊடகங்கள் ஆக்கசக்திக்குப் பயன்படவேண்டும். 'பழங்காலக் கலைச் செல்வங்களால் ஆண்டவர் பெயர் அன்று புகழப்பட்டதுபோலவே தற்காலக் கண்டுபிடிப்புகளாலும் அவர் பெயர் இன்றும் புகழ்பெறும.;' என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம், சமூகத்தொடர்பு கருவிகள், எ.ண்:24 கூறுகிறது. ஊடகங்கள் மனிதனையும், மனித மாண்பையும் அதன்மூலம் இறைவனையும் புகழும் கருவியாக அமைய வேண்டும்.
இந்த ஆய்வுக் கட்டுரையில் ஊடகங்கள் பற்றியும் அதன் வகைகள், பணிகள் பற்றியும், ஊடகம் இந்த சமூக, அரசியல், பொருளாதாரத் தளங்களில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும், ஊடகங்களால் அறநெறி, மனித மாண்பு பாதிப்புகள் பற்றியும் விவரித்துள்ளேன்.

                                      அலகு 1
                           ஊடகம் ஓர் அறிமுகம்
1.1 ஊடகம் வரையறை
ஊடகம் என்றால் கடத்துவது  என்று பொருள்படும். ஒரு செப்பு கம்பியின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு மின்சாரத்;தைக் கடத்திச் செல்லும் போது அது அங்கே ஒரு ஊடகமாக செயல்படுகிறது.
ஒரு கருத்தை அல்லது தகவலை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரிமாற்றம் செய்ய உதவும் கருவிதான் ஊடகம் எனப்படும். நாம் ஒருவரிடம் பேசும் போது நமது வார்தையானது ஒலி வடிவில் காற்றில் பயணம் செய்து மற்றவரைச் சென்றடைகிறது. இதில் ஒலி என்பது தகவலின் வடிவம். காற்று ஓர் ஊடகமாகச் செயல்படுகிறது. அதே போல் நாம் பேசுவதை மற்றவர் புரிந்துகொள்ளும் போது மொழி ஒரு ஊடகமாகச் செயல்படுகிறது.
ஊடகவியல் என்பது மனிதர்களுக்கிடையி;ல் கருத்துக்களை, தகவல்களைக் கொண்டு சென்று பரப்புகின்ற வேலையைச் செய்கின்ற துறையைக் குறிக்கிறது, குறிப்பாகச் சொன்னால் கருத்தியலை கட்டமைப்பதும், சந்தைப் பொருளாதாரத்தின் இருப்பை தீர்மானிப்பதும், அரசியல் தத்துவம் விஞ்ஞானம் சட்டம் மருத்துவம் பொறியியல் என்று பல்துறைகைளைத் தீர்மானிக்கும் சக்தியாக  ஊடகம் விளங்குகிறது.
                                    அலகு 2
                           ஊடகத்தின் வகைகள்
ஊடகம் அதன் தன்மைக்கேற்ப நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை
1)   அச்சு ஊடகம்
2)   அலை ஊடகம்
3)   காட்சி ஊடகம்
4)   மின்னனு ஊடகம்
2.1 அச்சு ஊடகம்;
     மனிதன் தனது கருத்துக்களையும், உணர்வுகளையும் பிறரிடம் பரிமாறிக்கொள்ள எழுத்து ஊடகம் பயனுள்ளதாக இருந்தது. அக்காலம் முதல் இக்காலம்வரை எழுத்து ஊடகம் தகவல்கள் பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கி.மு.106-ல், சிசரோ மன்னன், பிறப்பு, இறப்பு விவரங்களை எழுதி அரண்மனை முன் மக்கள் பார்வையில் வைத்தான். பெரும்பாலான விவிலிய கையேடுகள் 'பாப்பிரைசு' என்;ற நாணலிலும், விலங்குத்தோல் மற்றும் சுருள்களிலும் எழுதிவைக்கப்பட்டன.
அச்சு இயந்திரம் கி.பி.1477-ல் ஜெர்மனி நாட்டைச் சார்ந்த ஜோ ஹானெஸ் கூடன்பர்க் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் திராட்சைச்சாறு பிழியப் பயன்படும் கழிவியிலிருந்து மர அச்சுப் பொறியைக் கண்டறிந்தார். கி.பி.1811-ல் பிடரிக் நீராவிஇயந்திரத்தால் இயங்கும் அச்சு இயந்திரத்தை உருவாக்கினார். உலகின் முதல் பத்திரிக்கை அன்றைய ஜெர்மனியிலும், இன்று பிரான்சு நாட்டிலுமுள்ள ஸ்டராபர்க் நகரிலிருந்து 'உறவு' என்ற பெயரில் வெளிவந்தது. இந்தியாவில் அசோக மன்னரின் கல்வெட்டுகளே முதல் ஊடகம் என்றாலும் கி.பி.1780-ல் இந்திய இதழியலின் தந்தை என்றழைக்கப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவர் வங்காள கெஜட்' என்கிற பெயரில் தொடங்கினார். 1931-ல் 'தமிழ் மாகசின்' என்பதுதான் தமிழில் தோன்றிய முதல் இதழ் என்று கூறுவார்கள். ஆனால் சீசன்  பால்கு ஜயர் என்னும் ஜெர்மானிய நாட்டுத்துறவி கி.பி. 1706ல் தரகம்பாடிக்கு வந்து, தமிழ்கற்று மறைக்கல்வி நூல்களை வெளியிட்டார். ஜ2ஸ
     இன்று இந்தியாவில் அச்சு ஊடகம் நாளுக்கு நாள் மிகுந்த வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆனால் மக்களுக்கு நல்ல நேர்மையான, உண்மையான நடுநிலை செய்திகளைச்  தரும் பத்கிரிக்கைகள் மிகவும் குறைவு. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அச்சு ஊடகம் இன்று அரசியல் வாதிகளிடமும், மேல்தட்டு மக்களிடமும் சிக்கி தனது தனித்துவத்தை இழந்துவருகிறது.
2.2 அலை ஊடகம்
     அச்சு ஊடக வளர்ச்சியின் அடுத்தப்படி அலை ஊடகம். இது தகவல் சென்றடைவதை துரிதப்படுத்தியது. அலைபேசி, வானொலி போன்றவை அலை ஊடகத்திற்கு எடுத்துகாட்டாகும். தகவல்களை பரிமாரிக்கொள்ளப் புறாவையும், விலங்குகளையும் தூதனுப்பிய மனிதன் இன்று காற்றிலும் தூதனுப்புகிறான். கி..பி. 1894-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டைச் சார்ந்த மார்க்கோனி கம்பியில்லாத் தந்தி முறையைக் கண்டறிந்தார். இதன் படி ஒலியை மின்காந்த அலைகள் வழி அனுப்ப இயலும் என்பதைக் கண்டறிந்தார். இதுவே பிற்காலத்தில் 'வானொலி' கப்பலில் பயணம் செய்யும் மாலுமிகள் ஒருவரைஒருவர் தொடர்புகொள்ள பயன்படுத்தப்பட்டது. இந்தியாவில் பம்பாய் மகாணத்தின் அளுநராய் இருந்த ஜார்ஜ் அவர்களின் முயற்சியில் 1921- இல் டைம்ஸ் ஆப் இந்தியா அஞ்சல்-தந்தித் துறையுடன் இணைந்து சிறப்பு வானொலி நிலையம் ஒலிப்பரப்ப ஏற்பாடு செய்தது. இதன் தொடர்ச்சியாய் கி.பி. 1923 ஜுன் மாதம் அகில இந்திய வானொலி நிலையம் தனது ஒலிபரப்பைத் தொடங்கியது.ஜ3ஸ 1977 ஆம் ஆண்டு பண்பலை ஆரம்பிக்கப்பட்டு அரசும் தனியார் நிறுவனமும் பட்டிதொட்டிகளிலும், படகிலும் பயணமாகும் மீனர்;களுக்கும் ஏழை சாமானிய மக்களுக்கும் தொடர்ந்து வானொலி மூலம் உதவி வருகிறது. அலெக்சாண்டர் கிரகாம் பெல் (1847- 1922) தொலைபேசி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி மனிதர்களையும் மனங்களையும் இணைத்தார். மார்ட்டின் கூப்பர் என்ற அமெரிக்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி முதல் கைபேசியை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தார்.
2.3 காட்சி ஊடகம்
     காட்சி என்பது ஒலி மற்றும் ஒளி சார்ந்த கலவை. ஒரு காட்சி  வெறும் காடசிகளை மட்டும் காட்டி மறைந்துவிடுவது இல்லை. பார்வையாளர்கள் மத்தியில் கருத்துகளை விதைகளாகத் தூவுகிறது. காட்சி ஊடகம் இரண்டு வகைப்படும்
1) தொலைக்காட்சி
2) சினிமா
2.3.1 தொலைக்காட்சி:
     1925-ல் ஜான் லூகி போர்டு என்ற ஆங்கிலேயர் தொலைக்காட்சிக் கருவியை கண்டுபிடித்தார். ஆரம்பத்தில் ஒரு வினாடிக்கு 12 வட்ட வடிவில் இருந்த தொடர்படங்கள் மூலம் அசையும் படக்காட்சியை உருவாக்கினார். கி.பி 1920-30 –களில் அமெரிக்காவில் பிறப்பெடுத்த தொலைகாட்சி, கி.பி. 1970-ல் இந்தியாவிற்குள் நுழைந்தது. தொலைக்காட்சிபெட்டியை 1980-களில் அப்போதைய பிரதமர் திரு. இராஜிவ்காந்தி அவர்கள் கிராமங்களுக்கு அறிமுகப்படுத்தினார். செயற்கைக் கோள்வழி ஒளிபரப்பு 1962-ல் தகவல் தொடர்புக்கான முதல் கோளான 'ஆரம்ப பரவை' மூலம் தொடங்கப்பட்டது. பின்பு கி.பி 1965 மற்றும் 1971-இல் ஏவப்பட்ட 'இன்டெல்செட';, 'இன்டெர்புனிக'; என்ற இருகோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டடன. அதன் பயனாகத்தான் இன்று சுமார்150 நாடுகள் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஒளி மற்றும் ஒலி பிம்பங்களைப் பரிமாறிக்கொள்கின்றன.ஜ4ஸ இந்தியாவில் கி;.பி1976-ல் தூர்தசன்ஆரம்பிக்ப்பட்டது. நாளடைவில் விளம்பரங்களுக்கு அதிக முக்கியதுவம் கொடுத்துவிட்டு, பயனுள்ள தகவல்களை தருவதில்லை. இதற்கு முத்தாய்ப்பாக இன்று தனியார் தொலைகாட்சிகள் 'சன் டி.வி', 'ஸ்டார் டி.வி' எனப் புற்றீசல்போல் தொலைகாட்சிகள் வந்துவிட்டன.
2.3.2திரைப்படம்:
     கி;.பி 1890-ல் தாமஸ் ஆல்வா எடிசனும், வில்லியம் பிரிசு கிரினும் சினிமா காமிரா உருபெற வித்திட்டார்கள். இவர்களைத் தொடர்ந்து கி.பி 1885-ல் பிரான்ஸ் நாட்டைச்சார்ந்த லூமியர் சகோதரர்கள் திரைப்படகருவியைக் கண்டறிந்தார்கள். இவர்கள் தயாரித்த 'தொடர்வண்டி நிலையத்திற்கு தொடர்வண்டி வருகை' என்ற படம்தான் உலகின் முதல் படம். இதனைத் தொடர்ந்து 1903-ல் வெளியான  'ஒரு பெரிய தொடர்வண்டி கொள்ளை' என்பதுதான் சற்று நீளமான திரைப்படம். 1919-ல் இராபர்ட் பிள ஹர்த்தி என்ற ஜெர்மனி நாட்டை சார்தவர் செய்திக்குறும்படங்களைத் தயாரித்தார். இன்று ஏராளமான திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. சைபால் சட்டர்ஜி (டி.வி வேல்டு இதழின் ஆசிரியர்) ' ஒவ்வொரு வாரமும் 30 மொழிகளில் 110 மில்லியன் திரைபடங்கள் திரையிடப்படுகின்றன'ஜ5ஸஎனக் கூறுகின்றார். இந்தியாவில் முதல்படம் 1896-ல் மும்பை வாட்கன் உணவுவிடுதியில் லூமியர் சகோதரர்கள் தயாரித்த ஆறு குறும்படங்கள் திரையிடப்பட்டன. இந்தியர்களால் தயாரிக்கப்பட்ட முதல் படம் 'ராஜா ஹரிச்சந்திரா'. இது தாதா சாகிப் பால்கே என்பவரால் தயாரிக்கப்பட்டது. தமிழில் முதல்படமாக 'காளிதாஸ்' என்ற பெயரில் 1931-ல் வெளிவந்தது.
     திரைப்படம் உலகமக்கள் ஒருவரோடு ஒருவர் நெருக்கமாக அறிந்துகொள்ளவும், மனிதனை சர்வ தேசியமாக்கவும் உதவிசெய்கிறது. ஒரு பொது நலனிற்காக மக்கள் ஒருகுறிப்பிட்ட தேசியத்திற்குள், இனத்திங்குள் வாழ்கிறார்கள். திரைப்படமாவோ அவர்களை ஒருவருக்கொருவர் சமமாக தெரியும்படி செய்கிறது. அதன் மூலம் பல்வேறு தேசிய, இன வேறுபாடுகளை களையவும் செய்கிறது.இதன் அடிப்படையில் திரைப்படம் என்பது சர்வதேச அளவிளான, எல்லோருக்குமான ஒரு மனித தன்மையை உருவாக்குவதில் முன்னோடியாக இருக்கிறது.
2.4 மின்னனு ஊடகம்:
     இன்றைய நவீன உலகில் கணினியின் பங்கு அளப்பரியது. சார்லஸ் பாபேஜ் (1791-1871)
 என்பவர் முதன்முதலில் கணினியைக் கண்டுபிடித்தார். இவரே கணினியின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார். கணினி இன்று அனைத்துத் துறைகளிலும் ஊடுருவியுள்ளது. முதலில் கணினிகள் கணக்கிட மட்டுமே பயன்படத்தப்பட்டன, பின் ஏற்பட்ட வளர்ச்சியால் மருத்துவம், அறிவியல், புவியியல் போன்ற துறைகளிலும் தடம்பதித்தது. சர் தி மோத்தி ஜான் பெர்னர்ஸ-;ல_ என்பவர் 1989 ம் ஆண்டு இணையத்தளத்தைக் கண்டுபிடித்தார். இதன் மூலம் உலக மக்கள் அனைவரும் மனத்தாலும், உணர்வாலும் ஒன்றிணைக்கப்பட்டு சாதி மத, மொழி, இனம் போன்ற குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு ஒரு பரந்த நோக்கில் ஒன்றிணைக்கப்பட்டனர். ரேமண்ட் சாமுவேல் டாம்லின்சன் என்பர் 1971 ஆம் ஆண்டு முதன் முதலில் மின்னஞ்சலைக் கண்டுபிடித்தார். இன்றைய நவீன உலகத்தில் மின்னனு ஊடகம் மிகவும் அத்தியாவசிய ஒன்றாக மாறிவிட்டது.
                                   அலகு 3
                         ஊடகவியலின் பணிகள்
 ஊடகத்தின்;; செயற்பாடுகளை தகவல் தெரிவித்தல், அறிக்கையிடுதல், பிரதிபலிப்பை உருவாக்குதல் என்கின்ற மூன்று வரையறைகளுக்குள் அடக்கலாம்.
3.1 தகவல் தெரிவித்தல்:
கருத்தை மக்களிடம் எடுத்துச் செல்கின்ற பணி தான் ஒரு ஊடகத்தின் முதல் பணியாகும். கருத்து என்பது இதழியலில் செய்தி, கட்டுரை, விவாதம், விமர்சனம், சிறுகதை, தொடர்கதை, நாவல், கவிதை, பாடல் என்று பல்வேறு வடிவங்களில் மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகிறது. ஓலி ஒளி ஊடகங்களில் இவற்றுடன் கலந்துரையாடல் பாடல், நாடகம், சித்திரம் குறும்படம், ஆவணப்படம், திரைப்படம் என்று இந்த வடிவம் இன்னும் விரிவுபெறுகிறது. ஒரு விளம்பரமாக அறிவித்தல்; மூலமாகவும் கூட ஒரு கருத்து மக்களிடம் எடுத்துச் சொல்லப்படலாம். ஒரு கருத்து ஊடகங்கள் வழியாக மக்களிடம் எடுத்துச் செல்லப்படுகின்ற போது முதலில் தகவல் தெரிவித்தல் என்ற பணி அங்கு நடைபெறுகிறது.
எ.டு: எய்ட்ஸ், குடும்ப கட்டுப்பாட்டு விளம்பரங்கள்.
3.2 அறிக்கையிடுதல்
அறிக்கையிடுதல் என்பது ஊடகவியலில் மிக முக்கியமான ஒரு பணியாகும். ஒரு கருத்தை கட்டமைத்து, அதை மக்கள் நம்புகின்ற விதத்தில், அவர்கள் விருப்பத்தக்கவகையில் அவர்களுடைய அறிவுத் தளத்தை நோக்கிச் சென்றடைவதை ஊடகவியலில் அறிக்கையிடுதல் என்று சொல்கிறோம்;.
அதாவது ஒரு மனிதனின் சிந்தனைத் தளத்தில் ஊடுருவி அவன் எதைச் செய்ய வேண்டும், எதைச் சார்ந்திருக்க வேண்டும், எதைச் சாப்பிட வேண்டும், எதை உடுக்கவேண்டும், எதைக் குடிக்கவேண்டும், எதைப் படிக்க வேண்டும், எதைப் பார்க்க வேண்டும் என்ற அவனது அனைத்துச் செயற்பாடுகளையும் அவனையறியாமலே அல்லது அவன் அறியும் படியாகவோ புறநிலையில் இருந்து இயக்குகின்ற  சக்தியாக ஊடகவியல் விளங்குவதற்கு இந்த அறிக்ககையிடுதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
உதாரணமாக, நமது நாட்டிலே; தயாரிக்கப்படுகின்ற ஒரு குளிர் பானம், தரமும் சுவையும் ஊட்டச்சத்தும் நிறைந்ததாக இருந்தாலும், சர்வதேச குளிர் பானங்களுடன் சந்தையில் அதனால் போட்டிபோட முடிவதில்லை. இதற்குப் பொருளாதாரரீதியாக பலகாரணங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும் அவை எல்லாவற்றiயும் விட, உள்ளுர் குளிர்பானத்தைவிட சர்வதேசப் புகழ்பெற்ற குளிர்பானம்தான் சிறந்தது, அவற்றை மற்றவர்களுக்கு முன்பாக குடிப்பதே கௌரவத்துக்குரியது என்று நுகர்வோருடைய மனங்களிலே ஒருவிதபிரமை கட்டமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தப் பிரமை ஊடகங்களால் தான் கட்டமைக்கப்படுகிறது. இதைக் கட்டமைப்பதற்காக ஊடகவியலில் கையாளப்படும் முறைதான் அறிக்கையிடுதல் எனப்படுகிறது.
பொதுவாக அறிக்கையிடுதலில் தகவல் தெரிவித்தல், ஓப்பீடுதல், வெளிப்படுத்தல், நம்பிக்கையூட்டல் என்கின்ற வழிமுறைகள் கையாளப்படுகின்றன. உதாரணமாக சர்வதேச சந்தையில் இடம் பிடித்திருக்கும் ஒரு பிரபலமான நிறுவனத்தின் தயாரிப்பான ஒரு செருப்பு, முதன் முதலாக ஒரு நாட்டின் உள்சந்தைக்கு வருகின்றதென்று வைத்துக்கொண்டால் அந்தப் பொருள் சந்தைக்கு வருவதற்கு முன்னர் அதைப்பற்றிய விளம்பரம் செய்யப்படும். இந்த விளம்பரத்தில் மக்களின் அபிமானத்தை பெற்ற ஒரு விளையாட்டு வீரர் அந்த செருப்பை அணிவது போன்று காண்பிக்கப்படும். இதன் மூலம் இந்தத் தயாரிப்பு சிறந்ததாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அல்லது பிரமை நுகர்வோருடைய மனங்களிலே கட்டமைக்கப்படும். அறிக்கையிடுதல் என்பது ஒரு விளம்பரத்தில் மட்டுமல்லாமல் ஊடகத்துறை சார்ந்த அனைத்து கருத்தியல் வெளிப்பாட்டு வடிவங்களில் இந்த அடிப்படையிலேதான் மேற்கொள்ளப்படுகிறது.
பொதுவாக ஊடகத்துறையில் அறிக்கையிடுதல் என்பது இருவழித் தன்மை கொண்டதாகும்:
1)ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது
2)மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது
3.2.1 ஒரு அதிகார மையத்திலிருந்து மக்களை நோக்கி அறிக்கையிடப்படுவது:
     இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களைத் தயார் படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. பெரும்பாலும் அனைத்து ஊடகங்களிளும் 90மூ வீதமான செயற்பாடுகள் இந்த வகையயை அதாவது மேலிருந்து கீழ்நோக்கிய கருத்தைக் கொண்டுசெல்லும் தன்மையைக் கொண்டவை.
அது செய்தியும் செய்திசார்ந்த வடிவங்களாக இருக்கலாம். அல்லது நாடகம்; திரைப்படம் சின்னத்திரை என்ற வடிவங்களாகவும் இருக்கலாம். அனைத்துமே இந்த வரையறைக்குள் அடங்குகின்றன.
3.2.2 மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி, அதிகார மையத்தை நோக்கி அறிக்கையிடுவது:
     இது அதிகார மையத்தின் தேவைகளுக்காக மக்களைத் தயார்படுத்துவதற்கு மக்களிடமிருந்து தகவல்களைத் திரட்டி அதிகார மையத்துக்குக் கொடுப்பது. இது அநேகமாக ஒரு புலனாய்வு செயற்பாட்டுக்கு ஒப்பானது. இதற்குச் சிறந்த உதாரணமாகத் தேர்தல் காலங்களில் ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புக்களை குறிப்பிடலாம். அதேபோல இந்திய ஊடகங்கள் நடத்தும் திரைவரிசைப் போன்ற நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.
3.3 பிரதிபலிப்பை உருவாக்குதல்
ஒரு கருத்து ஒரு ஊடகத்தின் வழியாக ஏதாவதுதொரு வடிவத்தில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் போது அல்லது மக்கள் மத்தியிலே பரப்பப்படும்போது மக்களுடைய மனங்களிலே அறிதல், தெளிதல,; வினையாற்றுதல் என்ற மூன்று செயற்பாடுகள் நடக்கின்றன.
உதாரணமாக தமிழகத்தில் காச்சலுக்கென்று 'அ' என்ற மருந்து  பிரபலமாக இருக்கிறதென்று வைத்துக் கொண்டால் இப்போது 'ஆ' என்ற சிறந்த மருந்து வெளிநாடுகளில் பிரபலமாகவும் அது தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளதென்றும் ஒரு செய்தி ஊடகங்களில் வரும் போது அதை உபயோகிக்கும் ஒரு மனிதன் முதலில் இந்தப் புதிய மருந்து வந்திருக்கும் தகவலை அறிந்து கொள்கிறான். அதற்கு அடுத்தபடியாக அந்த தகவல் வழியாக இந்த புதிய மருந்து வெளிநாடுகளில்; பிரபலமாக இருப்பதால் சிறந்த மருந்தாக இருக்கும் என்ற கருத்து அவனுக்கு ஏற்படுகிறது. அதன் பின்னர் அந்த மருந்தை வாங்கவேண்டும் என்ற வினையாற்றும் எண்ணம் அவனுக்கு உருவாகிறது. மருத்துவர் பழைய மருந்தைக் கொடுத்தால் புதிய மருந்தை எழுதித் தாருங்கள் என்று கேட்கும் நிலைக்கு அவன் வருகிறான்.
                                    அலகு 4
                                 ஊடக அறவியல்
4.1 ஊடகமும் சமூகமும்
ஊடகங்கள் மனித வாழ்வில் ஒரு மாபெரும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்றன. வளர்ந்த நாடுகள், வளரா நாடுகள், படித்தவர்கள், படிக்காதவர்கள், ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என எல்லாரையும் பாகுபாடின்றி ஈர்த்து தன் வயப்படுத்தும் தன்மை கொண்டவை. கவனத்தை ஈர்த்தல், சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்துதல், நடத்தையை மாற்றி அமைத்தல், வாழ்வின் அறநெறியையே புறக்கணித்தல், வன்முறையை வாழ்வாக ஏற்றல் என ஊடகத்தின் தாக்கம் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல், ஊடகமும் சமுதாயத்தை மாற்றியமைக்கும் ஓர் ஆக்கப்பூர்வமான சக்தியாக செயல்படுகிறது.
உதாரணமாக 1981-ல் இருந்து 30 ஆண்டு காலமாகக் கொடுங்கோலாட்சி செய்து வந்த ஹாசினி முபாரக்கின் ஆட்சியை சமீபத்தில் புரட்சி செய்து புரட்டிப் போட்டிருக்கின்றது இணையதளம். பேஸ்புக் எனும் சமூகத்  தொடர்பு வலைத்தளம் எகிப்தின் தலை எழுத்தையே மாற்றியிருக்கிறது. எகிப்தின் 8,00,000 இளைஞர்கள் இந்த சமூகத் தொடர்பு வலைத்தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். தங்களின் கருத்துக்களை, அதிருப்திகளைப் பதிவுச் செய்கின்றனர். முதலில் ஒத்த கருத்துடையவர்கள் சில ஆயிரம் பேர் இணைந்து வலைக்குழுக்களாகத் தங்களை இணைத்துக் கொண்டனர். காரசாரமான விவாதங்களும், புதிய புரட்சிகர கருத்து உருவாக்கங்களும் பரவலாக்கம் செய்யப்பட்டன. அரசு செய்யும் கொடுமைகளும், கொலைகளும் கட்டவிழ்த்துவிடுகின்ற வன்முறை காட்சிகளும் பரிமாறப்பட்டன. இவைகள் இளைஞர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் வலைக்குழுக்களில் தங்களை இணைத்துக் கொண்டவர்கள் தெருக்களில் இறங்கிப் போராடத் துணிந்தனர். இதனாலேயே எகிப்துப் புரட்சி தொடங்கியது. எகிப்துப் புரட்சியின் வெற்றியைப் பெற்று தந்த பேஸ்புக் வலைத்தளத்தை பாராட்டும் வகையில் ஜமால் இப்ராகிம் என்ற மனிதர் தன் மகளுக்கு பேஸ்புக் ஜமால் இப்ராகிம் என்று பெயர் சூட்டியுள்ளார்.ஜ6ஸ கியூபாவில் புரட்சி நடைபெற்ற போது, தலைநகர் ஹவானாவில் அதன் தலைவர் பிடல் காஸ்ட்ரோ தொலைக்காட்சியில் தொடர்ந்து ஏழு மணி நேரம் மக்களிடம் உரையாற்றினார். இந்த உரையாடல் கியூபாவில் புரட்சி ஏற்பட வழிவகுத்தது.ஜ7ஸ இவ்வாறு ஊடகங்கள் மூலம் சமூக மாற்றங்களை உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
4.2 ஊடகமும் அரசியலும்:
     அரசியல் என்பது ஒரு சமூகக் கட்டமைப்பு சார்ந்த கூறுகளில் ஒன்று. அரசியலை அரசூஇயல் என்று பொருள் பிரித்துப் பார்க்கின்ற பொழுது ஒரு அரசியல் நடைபெறுகின்ற ஆட்சி முறைகளை விளக்குகின்ற ஒரு கல்வி.
 திரைப்படம் தான் தமிழ்நாட்டில் முதலமைச்சர்;களையும், பல அரசியல் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது. நடிகனும் முதல்வனாக முடியும் என்பதை இந்திய அரசியலுக்கு அறிமுகம் செய்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். சினிமா மூலம் ஏழை மக்களின் உள்ளங்களில் இடம் பெற்று, தமிழ் நாட்டிலேயே மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றிப் பெற்று 1988-ம் ஆண்டு மூன்றாம் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார் என்பதை தமிழக அரசியல் வரலாறு மறக்காது. நிர்வாகம், அரசியல், எழுத்து, பேச்சு, பத்திரிக்கை, இலக்கியம், நாடகம், திரைப்படம் போன்ற பல துறைகளில் முத்திரை பதித்த கருணாநிதி 1957-ம் ஆண்டு முதல்வராக பொறுப்பேற்றார். இப்பொழுது முதல்வராக பதவி வகிக்கும் ஜெ.ஜெயலலிதா பல படங்களில் நடித்துள்ளார். இதே போல் விஜயகாந்த, சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் ஊடகத் துறையில் செல்வாக்குப்பெற்று பின் அரசியலில் ஈடுபட்டவர்கள், தமிழ்நாட்டில் ஏன் இந்த நிலையென்றால் மக்கள் நிழலையும், நிஜங்களையும் இணைத்துப்பார்த்ததின் விபரீதம்.
ஊடகத்தைக் கட்டுப்படுத்தும் சக்திகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. ஊடக  நிறுவனத்தின் உள்ளிருந்து கட்டுப்படுத்துபவை. 2. வெளியிலிருந்து கட்டுப்படுததுபவை.
4.2.1 உள்ளிருந்து கட்டுப்படுத்துபவை:
4.2.1.1 உரிமையாளர்கள்:
ஊடக உரிமையாளர்கள், இதழ்கள்;, செய்தித்தாள்கள், தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம் என எந்த ஊடகத்தை எடுத்துக் கொண்டாலும் அவற்றின் உரிமையாளரின் தன்மைக் கேற்ப வெளியாகும் செய்திகளின் உருவமும, உள்ளடக்கமும் மாறுபடுகின்றது. தமிழ் நாட்டில் பத்திரிக்கைகள் ஒரு குடும்பத் தொழிலாகவே உள்ளது. (உதா)
எஸ்;.ஏ.பியின் குடும்பம்      - ஸ்ரீ குமுதம், மாலைமதி, கல்கண்டு
வாசன் குடும்பம்          - ஸ்ரீ ஆனந்த விகடன், ஜீனியர் விகடன், அவள் விகடன்
முரசொலி குடும்பம்        - குங்குமம், ஸ்ரீ வண்ணத்திரை, குங்குமச் சிமிழ், முத்தாரம்
சதாசிவம் குடும்பம்        - ஸ்ரீ கல்கி, கோகுலம், மங்கையர் மலர்
ஆதித்தனார் குடும்பம்      - ஸ்ரீ தினத்தந்தி, ராணி, ராணி காமிக்ஸ், ராணி முத்து, தின வார                                                 மாத இதழ்கள்
ரூபர்ட் முர்டாக் குடும்பம்    - ஸ்ரீ உலகத்தில் 40 சதவீதம் தனது  கைக்குள் வைத்திருக்கிறது.                       எடு: ஸ்;டார் டிவி.ஜ8ஸ
தொலைக்காட்சிகளும் அரசியல் வாதிகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.எடு: அதிமுக.  கட்சி சார்பாக ஜெயா தொலைக்காட்;சியும், திமுக சார்பாக சன் தொலைக்காட்;சியும்;, தே.மு.தி.க சார்பாக கேப்டன் தொலைக்காட்;சியும் ஆதரவாக செய்திகளை தந்து மக்களிடத்தில் ஒரு பெரிய குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மக்கள் நடுநிலையான செய்திகளைப் பெறாமல் அந்தந்த உரிமையாளரின் தன்மைக்கேற்ப செய்திகள் மாறுபடுவதால் உண்மையான செய்தியைப் பெற முடியாமல் போகிறது.
4.2.1.2 தொலைத்iதாடர்பு நிறுவனங்கள்:
     உரிமையாளர்கள் மட்டுமன்றி நிறுவனத்தின் தன்மையும் செய்திகளின் உருவத்தையும், உள்ளடக்கத்தையும் பெருமளவில் பாதிக்கின்றது. நிறுவனம் என்பது அலுவலகத்தை மட்டும் குறிப்பதல்ல மாறாகக் கண்ணால் காண முடியாத அமைப்புகளையும் குறிக்கும். அந்த நிறுவனத்திற்கே உரிய பாரம்பரியம், தனித்தன்மை மிக்க குணங்கள் ஆகியவை கண்ணால், காண முடியாத அமைப்புக்குள் அடங்கும்.எடு: ஆனந்த விகடன், இதழ் சிகரெட் விளம்பரங்களை வெளியிடாது.ஜ9ஸ
4.2.2 வெளியிலிருந்து கட்டுப்படுத்துபவை:
4.2.2.1 அரசும் சட்டங்களும்:
     இந்தியாவில் பேச்சுரிமை, எழுத்துரிமை, போன்ற பல உரிமைகள் கொடுக்கப்பட்டாலும் எல்லாவற்றையும் பேசவே, எழுதவோ, முடியாது. குறிப்பாக நாட்டின் இறையாண்மைக்கு எதிராக எழுதப்படும் எந்த ஒரு கருத்தும் அரசால் கட்டுப்படுத்தப்படும். இந்தியாவைப் பொருத்த வரையில் இந்திய ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் ஏராளமான சட்டங்கள் உள்ளன. சிலவற்றை பற்றிப் பார்ப்போம்.
4.2.2.1.1 அரசாங்க ரகசியங்;கள் சட்டம்:
இச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் ரகசியமாக அறிவிக்கும் எந்த ஒரு கருத்தையும் ஊடகங்கள் வெளியிட உரிமை இல்லை. அதுபற்றி நேரடியான முறையில் அரசு அலுவலகங்களில் இருந்து தகவல் திரட்டவும் முடியாது. மீறிச் செய்பவர்களுக்கு சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு.
4.2.2.1.2 அவதூறு சட்டம்:
ஊடகங்களில் வெளியான ஏதேனும் ஒன்று யாரையேனும் அவதூறு செய்வதாக இருந்தால் சம்மந்தப்பட்டவர் சட்டத்தின் துணையை அணுக முடியும். மானநஷ்ட வழக்கும் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஊடகத்தின் உரிமையாளர்இ ஆசிரியர் ஆகியோருக்கு தண்டனை வாங்கிதர முடியும். எ.டு: ஜெயலலிதா நக்கீரன் கோபால் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகள்.
4.2.2.2 திரைப்பட தணிக்கை குழு:
இந்திய அரசால் அமைக்கப்பட்ட திரைப்படத்தணிக்கைக் குழு திரைப்படங்களைத் தணிக்கை செய்து சான்றிதழ் கொடுக்கிறது. சான்றிதழ் பெறாத திரைப்படங்களை திரையிட முடியாது. சில காட்சிகளை மாற்றி அமைக்கக் கூட தணிக்கை குழுவிற்கு அதிகாரம் உண்டு. திரைப்படத்தில் பாலுணர்வைத் தூண்டும் காட்சிகள், இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான காட்சிகளைத் தடை செய்யத் தணிக்கைக் குழுவிற்;கு அதிகாரம் உண்டு.
4.2.2.3 விளம்பரங்கள்:
ஊடகங்கள் செயல்;பட பணம் இன்றியமையான ஒன்று. அதிக இலாபம் வேண்டுமெனில் உற்பத்திச் செலவைக் குறைத்தாக வேண்டும். எனவே, இவற்றை உபயோகிக்கும் வாசகர்கள், நேயர்கள் மீது இந்த சுமையைச் சுமத்த முடியாது. ஆகையால் ஊடகங்கள் விளம்பரங்களையே சார்ந்திருக்க வேண்டிஇருக்கிறது. செய்தித்தாள்களில் பெரும்பாலும் விளம்பரங்களைத் தருவது அரசு. எனவே பெரும்பாலன பத்திரிக்கைகள் ஆளும் கட்சியையே சார்ந்துள்ளது.
4.3 ஊடகமும் பொருளாதாரமும்:
தேவைக்கான உற்பத்தி' என்பது பொருளியலிலே ஒரு முக்கியமான கருத்து. அதாவது மக்களுடைய தேவையைப் பூர்த்தி செய்வதற்காகப் பொருட்களை உற்பத்தி செய்வது ஒரு வகை. உற்பத்தி செய்யப்பட்ட அல்லது செய்யப்படவுள்ள பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்குவது இன்னொரு வகை. இன்றைய உலகமயமாதல் சூழலில் பொருட்களுக்கான தேவையை மக்கள் மத்தியில் வலிந்து உருவாக்கும் வேலையை அதாவது மக்களைச் சந்தைப் பொருளாக்கும் வேலையை அனைத்து மேலாதிக்க ஊடகங்களும் செய்து வருகின்றன.
ஊடகங்களின் வருமானம் 75மூ விளம்பரங்களையே நம்பியிருப்பதால் பன்னாட்டு நிறுவனங்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் செயல்படுகின்றன. மேலும் ஊடகத்துறையில் அதிக வருமானம் தருவது திரைப்படம் என்பதால் இன்றைய இளைஞர்கள் திரைப்படத்தில்; சேருவதையே தனது இலட்சியமாக கொண்டுள்ளனர். நிழல்களை நிஜங்களாக பார்க்கும் இவர்களால் திரைப்படதுறையில் சிலர் திடீர் பணக்காரர்களாக உருவாகின்றனர். (எ.டு) ரஜினியின் வருமானம் அம்பானியின் வருமானத்தை விட அதிகமாக உள்ளது. 2007-08 ல் அம்பானியின் வருமானம் ஒரு வருடத்திற்கு 44 கோடி, ரஜினியின் வருமானம் 100 நாளில் 20 கோடி. எப்பாடுபட்டாலும் தலைவர் படத்தை பார்க்க வேண்டும் என்ற இளைஞர்கள் இருக்கும் வரையில் திடீர் பணக்காரர்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்.
தமிழ்நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(புனுP) திரைப்படதுறையில் 0.1 மூ ஒருவேளை உணவுகூட இல்லாமல் தவிக்கும் மக்கள் வாழும் தமிழகத்தில் 2006 ஆம் ஆண்டு ஜீலை 22 ஆம் தேதி தமிழகஅரசு தமிழ்பெயரை வைக்கும் திரைப்படங்களுக்கு வரிச்சலுகைகைளை வாரி வழங்கியது. இப்படிப் பொறுப்பற்ற முறையில் பணத்தை செலவழித்து நம்மை கடன்காரர்களாக மாற்றிவிட்டது.
                                 அலகு 5
                       ஊடகமும் மனிதமாண்பும்
5.1 பாதிப்புகள்:
ஊடகங்கள்  குழந்தைகள் மீது ஏற்படுத்தும் பாதிப்பை நியூசிலாந்து, டியூடைன் பல்கலைக்கழகம் ஆய்வுசெய்துள்ளது. 1972-73 -களில் பிறந்த குழந்தைகளைத் தொடர்ந்து 30 ஆண்டுகள் கண்காணித்து ஒரு முடிவினை கண்டுபிடித்துள்ளது. இதன் ஆய்வுப்படி நாள்தோரும் மூன்று மணி நேரம் தொலைக்காட்சியினைப் பார்த்த குழந்தைகள் பள்ளி இறுதி வகுப்பினைக் கூட முடிக்கவில்லை. பத்து வயதிற்கு முன்பே அதிகம் தொலைக்காட்ச்சியைப் பார்த்த குழந்தைகள் புத்திசாலிகளாக இருந்தாலும் பாதிக்கப்படுகின்றனர்.ஜ10ஸ வாரப் பத்திரிக்கை நடத்திய  ஆய்வில் 24 மணி நேரமும் கேலிச்சித்திரம் தொலைக்காட்சியைப் பார்த்த குழந்தைகளிடையே வன்முறை அதிகமாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. குழந்தைகள்பெரும்பாலும் கதாப்பாத்திரங்களாகவே தங்களை நினைத்து கொள்கின்றனர். உதாரணமாக மும்பையில் சக்திமான் தொடரைப் பார்த்த சிறுவன்  மாடியிலிருந்து குதித்து உயிர்விட்டான்.
இளைஞர்களை பாலுணர்ச்சிக்கு அடிமையாக்கி, அவர்களைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இன்றைய நடிகர்கள் நாளைய  தலைவர்களாகும் நிலை உள்ளது. இந்த கண்மூடித்தனமான தனிமனித வழிபாடு இந்தியாவில் உள்ளது. திரைப்படங்களை விட அதிகம் சக்தி வாய்ந்தது  விளம்பரங்கள். எதை படிப்பது, எதை உடுப்பது என்பதை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்குகிறது.
ஊடகங்கள் உருவாக்கும் நாகரீக மோகத்தால் இன்று பரவலாக உலக நாடுகள் தனது சுய அடையாளங்களை இழந்து வருகின்றன‌. ஊடகங்கள் விதைத்தவற்றில் நாம் இழந்ததுதான் அதிகமாக உள்ளது. மக்களின் போராட்ட உணர்வுகள் மழுங்கடிப்பட்டுள்ளன. உலகமயமாதலில் ஒவ்வொரு குடிமகனையும் நேரடியாக பங்குபெற செய்துள்ளது அதன் பாதிப்பால் உலகப் பொருளாதார பாதிப்புகள் ஒவ்வொரு மனிதனின் முதுகெலும்பையும் உடைத்துவிடுகிறது. நுகர்வுக் கலாச்சாரத்தை பெருக்கியும் மறைமுகமாக மக்களின் வளத்தையும் அமெரிக்க ஏகாதிபத்திய நாடுகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் சூழல்களையும் உருவாக்கியுள்ளது.
5.2 விமர்சனம்:
இந்திய ஊடகங்கள் பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுக்கின்றன. இதற்கு மூன்று உதாரணங்கள் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை ஊடகங்கள் திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் எண்பது சதவீதம் மக்கள்; வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்தப் பிரச்சினைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து தீர்வு காணத் தூண்டாமல், பிரச்சினைகளில் இருந்து திசை திருப்புகிறது ஊடகங்கள். திரைப்பட நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான செய்தி;களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது, அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
இரண்டாவது பல நேரங்களில் ஊடகங்கள் மக்களை பிளவுபடுத்துகின்றன. இங்கே பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் ஓர் ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் குண்டு வைத்து  அவர்கள் தான் என்று ஏதோ ஒரு மதத்தின் பெயரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படித் தெரியும் என்றால் எஸ்.எம்.எஸ். மற்றும் மின்னஞ்சல் வந்தது என்று  காரணம்; காட்டி ஒரு மதத்தையே ஒட்டு மொத்த கொடூரக்காரர்களாக சித்தரிக்கின்றன ஊடகங்கள்.
மூன்றாவதாக ஒரு நிலபுரபுத்துவ சமூகம் - நவீன சமூகமாக மாறுகிற காலக்கட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்றப் பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு ஊடகங்கள் உதவ வேண்டும். அறிவியல் சிந்தனையைத் தூண்டுவதற்கு பதில் சோதிடம்;, மூட நம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான செய்திகளைப் பரப்புகின்றன ஊடகங்கள். ஏற்கனவே நமது நாட்டில் எண்பது சதவீத மக்கள் சாதி, மதம், மூடநம்பிக்கை போன்றவற்றில் சிக்கி மனரீதியாக பின் தங்கி இருக்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்குக் கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக ஊடகங்கள் தூண்டுதலாக இருக்கவில்லை. ஆனால், மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலைகளை நமது ஊடகங்கள செய்கின்றன. பல அலைவரிசைகளில் பெரும்பாலான நேரம் சோதிடம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன நிறச்சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாகச் சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கின்றன இன்றைய ஊடகங்கள்.
                                   அலகு 6
                அறநெறியும்- மனித மாண்பும் -ஊடகமும்
6.1 அறநெறி:
'மனிதர் திறமைகளை;, ஆற்றல்களைப் பன்முகப்படுத்தி, ஒருங்கிணைத்து தனிமனித, சமூக மாண்பையும், இறையாண்மையையும் பரிணமிக்கச்செய்து பாதுகாக்கச்செய்யும் இயக்கச்சக்தியே அறநெறி' என்று டசில் கூறுகின்றார்.
திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தனது உண்மையின் ஒளிச்சுடர் என்னும் மடலில் 'அறநெறி என்பது கடவுள் மனிதருக்கு தரும் அழைப்பிற்கான பதில்' என்று கூறுகிறார்.
6.2 இரண்டாம் வத்திகான் சங்கம்:
     1) 'மனிதரைச் சார்ந்தவை எத்துணைச் சிறந்தவையாயினும் கலை உட்பட அவை அனைத்தையும் விட அறநெறியே உயர்ந்து நின்று அவற்றை ஒழுங்குபடுத்துகிறது. அறநெறி மட்டுமே கடவுளின் பகுத்தறிவுள்ள படைப்பும் மேலானவற்றிற்கு அழைக்கப்பட்டவருமான மனிதரின் முழு இயல்பை எட்டுகிறது. இந்நெறியை மனிதர் முழுமையாகவும் உறுதியுடனும் கடைப்பிடித்தால் அவர்கள் நிறைவையும்  பேரின்பத்தையும் முழுமையாய் அடைய அதுவே அவர்களை ஆற்றுப்படுத்தும்.' (இரண்டாம் வத்திக்கான் சங்கம், சமூக தொடரபு கருவிகள், எண்:6) ஜ11ஸ
2) 'ஒழுக்கம் சார்ந்த தீமைகளைச் சமூகத் தொடர்புக் கருவிகளின் துணைக்கொண்டு எடுத்துரைப்பதும், வருணிப்பதும், விளக்குவதும், மனித இனத்தைப்பற்றி ஆழ்ந்தறியவும், பகுத்தாயவும் பயன்படுகின்றது.... சமூகத் தொடர்பு கருவிகள் மக்களுக்குத் தீமையை விளைவிக்காமல் நன்மையை விளைவிக்க வேண்டுமாயின், குறிப்பாக மரியாதைக்குறியவற்றையும் ஆதிப்பாவத்தால் புண்பட்ட மனிதரை முறைக்கெட்ட ஆசைகளில் எளிதாகச் சிக்கவைப்பவற்றையும் பொறுத்தவரையில் அறநெறி விதிகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டம்.' (இரண்டாம் வத்திக்கான் சங்கம், சமூக தொடரபு கருவிகள், எண்:7).ஜ12ஸ
3) 'சமூகத் தொடர்புக் கலையை பயன்படுத்துவதால் அவர்கள் தீமைக்கு உள்ளாகாமல், உலகுக்கு உப்பாகச் சுவையூட்டி, ஒளியாக விளங்குவார்கள். மனித சமுதாயத்தின் எதிர்காலம் இத்துறையைச் சரியாகப் பயன்படத்துவதில் அடங்கியுள்ளமையால், மனித நலனுக்காகவே இதனைக் கையாள வேண்டும்....'(இரண்டாம் வத்திக்கான் சங்கம், சமூக தொடர்பு கருவிகள், எண்:24)ஜ13ஸ
6.3 ஊடகமும் அறநெறி பாதிப்பும்:
ஒவ்வொரு  சமுதாயத்திற்கென்று  தனிக் கலாச்சாரமும், நம்பிக்கையும், சுயகட்டுப்பாடுகளும் உள்ளன. ஒரு மனிதனை முழுமனிதனாக மாற்றுவது அவன் மேற்கோள்ளும் அறநெறியும், மனித மாண்புமே ஆகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் போய் ஒருவனுக்கு பலபேர் என்ற கலாச்சாரம் ஊடகங்களின் தாக்குதலால் ஏற்படுகிறது. இன்றைய சமூக அமைப்பு ஆணாதிக்க அடிப்படையில் அமைந்திருக்கிறது. அதன்படி ஆண் என்பவன் உயரந்;தவன், மேலானவன். பெண்கள் அவனைச் சார்ந்து வாழ வேண்டும், அவனுக்காக வாழ வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றனர். நடைமுறையில் ஆணும், பெண்ணும் சமமான அறிவும் செயல்திறனும் பெற்றிருந்தாலும் சமூகத்தின் பார்வை ஆணாதிக்க பார்வை கொண்டிப்பதால் அதன் அடிப்படையிலேயே அனைத்துச் செயல்களும் உருவாக்கப்படுகின்றன. இவ்வகையில் பெண்கள் மாண்பு அழிவதற்கு ஊடகங்கள் வழிவகுக்கின்றன.
ஊடகங்களில் ஆண், பெண் இருபாலருமே எந்த விதத்தில் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியம். பெண்ணையும்,ஆணையும் சம்பிரதாய மதிப்பீடுகளில் வைத்தே காட்டுகின்றன. பெண் என்பவளை அழகோடு, மரபுகளோடு, வீட்டுவேலைகளோடு தொடர்புபடுத்தியும், ஆணை அதிகாரம், கம்பீரம், வீரம் ஆகிய குணங்களைக்கொண்டவனாகவும் சித்தரிக்கின்றன. திருநங்கைகளை மதிப்பதற்குப் பதில் அவர்களின் மனதையும், மாண்பையும் புண்படுத்துகிறது.
ஊடகங்களில் சில சாதியினர் மட்டுமே அதிகம் முதன்மைப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு கௌரவமும், அங்கிகாரமும் கிடைக்கின்றன. பிற இன சாதி நகைச்சுவையாகவும், கேளிக்கையாகவும் பயன்படுத்தப்படுகின்றனர். பெரும்பாலும் ஊடகங்கள் சித்தரிப்பது இந்துமதத்தை மட்டுமே. ஊடகங்களால் தொலைதூரத்தில் உள்ள மனிதர்களிடம் தொடர்பு கொண்ட மனிதன் தன் அருகில் உள்ளவர்களை மறந்து விடுகிறான். இங்கு, தொலைதூரம் எளிதாய் போனது, அருகாமை தொலைந்து போனது, மனித அறநெறியும் மறைந்து போனது.

முடிவுரை:
     ஊடகங்கள் தவறுசெய்வதில்லை. மாறாக அதனைப் பயன்படுத்தும் மனிதர்கள் தான் தனது சுயநலத்திற்காக தவறாகப் பயன்படுத்துகின்றனர். ஊடகங்களை சமூக மாற்றத்திற்கும் ஆன்மீக மறுமலர்ச்சிக்கும் பயன்படுத்தவேண்டும். ஊடக ஆன்மீகத்தை வளர்த்து இச்சமூகத்தில் பரவிக்கிடக்கும் தீமைகளைக் களைந்து, வேற்றுமைகளை ஒழித்து, ஒற்றுமையை வளர்க்க வேண்டும். ஊடகங்கள் பற்றிய தெளிவான அறிவு, அதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக ஊடகங்கள் மூலம் மனித மாண்பும், அறநெறியும் வளரவேண்டும். கத்தோலிக்க தொலைக்காட்சியை நிறுவி மனித மாண்பை விதைத்திட வேண்டும். நல்ல அச்சு வெளியீடுகளை ஊக்குவிக்க வேண்டும். கத்தோலிக்க உணர்வை ஏற்படுத்த உண்மையான கத்தோலிக்க உணர்வுகளை ஏற்படுத்தி அவற்றிற்கு ஆதரவளிக்க வேண்டும். கலை மறறும் பண்பாட்டை வளர்க்கும் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஊடகங்களைத் தீர்மானிக்கும் சக்தியாக மக்களை உருவாக்க வேண்டும்.
துணை நின்ற நூல்கள்
1) சுரேஷ் பால். 'மீடியா உலகம்'. சென்னை: தீபிகா வெளிய{டு, , 1999
2) பவா சமத்துவன்.'தொலைக்காட்சி உலகம்'. சென்னை: புதுயுகம் செய்முறை செம்மையாக்கம், 2007.
3) ப.நீலகண்டன். 'வண்ணப்பூக்கள்'. சென்னை: வானதி பதிப்பகம்,1980.
4) பேல பெலாஸ். 'சினிமா கோட்பாடு'. மொழியாக்கம். சிவக்குமார். சென்னை: சென்னை புக்ஸ்.1985.
5) அமன் குமார் . 'சினிமா ரசனை'. சென்னை: ப.ஃறுளி  பதிப்பகம்,1990.
6) ஜெனித். 'தாயன்போடு '. திருச்சி: தேடல் வெளியீடு.2011.
கட்டுரைகள்:
1) சமூக தொடர்பு கருவிகள்.இரண்டாம் வத்திக்கான் சங்கம். பதிப்பாசிரியர். பவுல் லியோன் , எரோணிமுசு. திருச்சி: தேடல் வெளியீடு. 2008.
2) செபாஸ்டியன் பெரியண்ணன், ஊடகத்தின் வளர்ச்சியம் அது சமூனத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்'. மறை அருவி 30.2 .2006. 3-15.
இணையதளம்:
1) இராஜகம்பீரத்தான் மால்கம், ஊடகங்களின் ஆளுமையில் இனிவரும் நூற்றாண்டுகள், pரடிடiளாநன ழn 11 யுரப 2010இ யஉஉநளள னயவநஇ 12 னுநஉ 2011. யஎயடையடிடந கசழஅஇ hவவி:ஃஃறறற.மநநவசர.உழஅஃiனெநஒ.pரி?ழிவழைnஸ்ரீஉழஅ_உழவெநவெரூஎநைறஸ்ரீயசவiஉடநரூனைஸ்ரீ17712ரூஐவநஅனைஸ்ரீ139; iவெநசநெவ.

கழழவழெவநள:
ஜ1ஸ இராஜகம்பீரத்தான் மால்கம், ஊடகங்களின் ஆளுமையில் இனிவரும் நூற்றாண்டுகள், pரடிடiளாநன ழn 11 யுரப 2010இ யஉஉநளள னயவநஇ 12 னுநஉ 2011. யஎயடையடிடந கசழஅஇ hவவி:ஃஃறறற.மநநவசர.உழஅஃiனெநஒ.pரி?ழிவழைnஸ்ரீஉழஅ_உழவெநவெரூஎநைறஸ்ரீயசவiஉடநரூனைஸ்ரீ17712ரூஐவநஅனைஸ்ரீ139; iவெநசநெவ.

ஜ2ஸ செபாஸ்டியன் பெரியண்ணன், 'ஊடகத்தின் வளர்ச்சியம் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்'. மறை அருவி 30.2 .2006. 5.
ஜ3ஸ செபாஸ்டியன் பெரியண்ணன், 'ஊடகத்தின் வளர்ச்சியம் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்'.6.
ஜ4ஸ செபாஸ்டியன் பெரியண்ணன், 'ஊடகத்தின் வளர்ச்சியம் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும்'.8.
ஜ5ஸ செபாஸ்டியன் பெரியண்ணன், 'ஊடகத்தின் வளர்ச்சியம் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் '.9-10.
ஜ6ஸ ஜெனித். 'தாயன்போடு'. திருச்சி: தேடல் வெளியீடு.2011.27.
ஜ7ஸ பவா சமத்துவன். 'தொலைக்காட்சி உலகம்'. சென்னை: புதுயுகம் செய்முறை செம்மையாக்கம், 2007. 33.

ஜ8ஸ  ஜோசப் லூர்து ராஜா, ' ஊடகமும் அரசியலும்'. மறை அருவி 30.2 .2006.49.
ஜ9ஸ சுரேஷ் பால். 'மீடியா உலகம்'. சென்னை: தீபிகா வெளிய{டு, , 1999.71.

ஜ10ஸ சூசை மாணிக்கம், 'ஊடகங்களும் நற்செய்தி பணியும்' மறை அருவி 30.2 .2006.29.
ஜ11ஸ சமூக தொடர்பு கருவிகள்.இரண்டாம் வத்திக்கான் சங்கம். பதிப்பாசிரியர். பவுல் லியோன் , எரோணிமுசு. திருச்சி: தேடல் வெளியீடு. 2008.70.
ஜ12ஸ சமூக தொடர்பு கருவிகள்.இரண்டாம் வத்திக்கான் சங்கம். பதிப்பாசிரியர். பவுல் லியோன் , எரோணிமுசு. திருச்சி: தேடல் வெளியீடு. 2008.70.
ஜ13ஸ சமூக தொடர்பு கருவிகள்.இரண்டாம் வத்திக்கான் சங்கம். பதிப்பாசிரியர். பவுல் லியோன் , எரோணிமுசு. திருச்சி: தேடல் வெளியீடு. 2008.78.